திறனறிவு மற்றும் காரணவியல் வினாக்கள் – விடைகள், விளக்கங்களுடன் · 26 வினாக்கள்
வினா 124 · அறிவியல் – வேதியியல் (Science – Chemistry)
0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
0.10 M of weak acid is found to be dissociated to the extent of 1.20% at 25°C. Its dissociation constant is
சரியான விடை: C. 1.44 × 10⁻⁵
Ka = Cα² = 0.10 × (0.012)² = 1.44 × 10⁻⁵.
Ka = Cα² = 0.10 × (0.012)² = 1.44 × 10⁻⁵.
வினா 140 · காலம் மற்றும் வேலை (Time and Work)
P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?
P and Q can do a piece of work in 20 days and 40 days respectively. They started the work together and Q left after some days of work and P finished the remaining work in 8 days. After how many days from the start did Q leave?
சரியான விடை: C. 8 நாட்கள் (8 days)
P 8 நாட்களில் 8/20 = 2/5 வேலை. மீதி 3/5 இருவரும் சேர்ந்து: x × (1/20 + 1/40) = 3/5 → x = 8 நாட்கள்.
P alone does 8/20 = 2/5. Together they did 3/5: x × (1/20 + 1/40) = 3/5 gives x = 8 days.
வினா 141 · கூட்டுவட்டி (Compound Interest)
ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் Bன் பங்குகள்
Divide Rs. 2,602 between A and B, so that the amount of A at the end of 6 years is equal to the amount of B at the end of 8 years, compound interest being at 4% per annum.
சரியான விடை: D. ரூ. 1,352, ரூ. 1,250
A(1.04)⁶ = B(1.04)⁸ → A : B = (1.04)² = 676 : 625 → A = 1352, B = 1250.
A(1.04)⁶ = B(1.04)⁸ gives A : B = 1.04² = 676 : 625, so A = 1352 and B = 1250.
வினா 142 · தனிவட்டி (Simple Interest)
ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16⅔% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.
Find the simple interest on Rs. 68,000 at 16⅔% per annum for 9 months.
சரியான விடை: A. ரூ. 8,500 (Rs. 8,500)
த.வ = 68000 × (50/3)/100 × 9/12 = 8500.
SI = 68000 × (50/3)% × 9/12 = 8500.
வினா 143 · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportion)
a : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.
If a : b = 3 : 7 and b : c = 7 : 6, then find the ratio between c and a.
சரியான விடை: D. 2 : 1
a : b : c = 3 : 7 : 6 → c : a = 6 : 3 = 2 : 1.
a : b : c = 3 : 7 : 6, so c : a = 6 : 3 = 2 : 1.
வினா 144 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம. ______.
The ratio of two numbers is 3 : 4 and H.C.F. is 4. Their L.C.M. is ______.
சரியான விடை: A. 48
எண்கள் 12, 16 → மீ.சி.ம = 3 × 4 × 4 = 48.
The numbers are 12 and 16, so LCM = 3 × 4 × 4 = 48.
வினா 145 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
ஒரு எண் x ஆனது 13 ஆல் வகுபடும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் x ன் மிகச்சிறிய மதிப்பு ______.
A number x is divisible by 13. When this number is divided by 16, 24, 32 it leaves a remainder 6 in each case. The least value of x is ______.
சரியான விடை: A. 390
மீ.சி.ம(16, 24, 32) = 96. x = 96k + 6; k = 4 எனில் 390 = 13 × 30.
LCM(16, 24, 32) = 96, so x = 96k + 6; k = 4 gives 390 = 13 × 30.
வினா 146 · சதவீதம் (Percentage)
ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
There are 80 students in a class. If 25% are absent on a particular day, find the number of students present in the class.
சரியான விடை: B. 60
வந்தவர்கள் = 80 இன் 75% = 60.
Present = 75% of 80 = 60.
வினா 147 · சதவீதம் (Percentage)
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
The ratio of boys and girls in a class is 5 : 3. If 16% of boys and 8% of girls failed in an examination, then find the percentage of passed students.
சரியான விடை: A. 87%
தேர்ச்சி = (5 × 84 + 3 × 92) ÷ 8 = 696 ÷ 8 = 87%.
Passed = (5 × 84 + 3 × 92) ÷ 8 = 87%.
வினா 148 · எண்ணியல் (Number System)
தொடரின் கூடுதல் காண்க: 1 + 3 + 5 + … + 55
Find the sum of 1 + 3 + 5 + … + 55
சரியான விடை: B. 784
ஒற்றை எண்கள் 28; கூடுதல் = 28² = 784.
There are 28 odd numbers, so the sum is 28² = 784.
வினா 149 · எண் மற்றும் எழுத்துத் தொடர் (Number and Letter Series)
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு: 0, 2, 24, 252, 3120, ______.
The next term in the given sequence is 0, 2, 24, 252, 3120, ______.
சரியான விடை: B. 46650
nⁿ − n: 1¹−1, 2²−2, 3³−3, 4⁴−4, 5⁵−5 → 6⁶ − 6 = 46650.
Terms are nⁿ − n, so the next is 6⁶ − 6 = 46650.
வினா 150 · எண் மற்றும் எழுத்துத் தொடர் (Number and Letter Series)
இந்த தொடர்ச்சி எண்களில் 6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 இரண்டு வித்தியாசத்தை உடைய எண்களில் எத்தனை இணைகள் உள்ளன?
In the series 6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8, how many pairs of successive numbers have a difference of 2 each?
சரியான விடை: C. மூன்று (Three)
(6, 4), (4, 2), (5, 3) → மூன்று இணைகள்.
(6, 4), (4, 2) and (5, 3): three pairs.
வினா 151 · பகடை (Dice)
ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (மேல் | இடது | வலது): ① 2 | 3 | 5 ② 1 | 2 | 3 ③ 3 | 4 | 5 ④ 6 | 2 | 5. 2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.
A dice is thrown four times and its four different positions are given (top | left | right): ① 2 | 3 | 5 ② 1 | 2 | 3 ③ 3 | 4 | 5 ④ 6 | 2 | 5. Find the number on the face opposite the face showing 2.
சரியான விடை: A. 4
2-க்கு அருகில் 3, 5, 1, 6 வருகின்றன; மீதமுள்ள 4 தான் எதிர்ப்பக்கம்.
3, 5, 1 and 6 all touch 2, so the remaining face 4 is opposite.
வினா 152 · எண் மற்றும் எழுத்துத் தொடர் (Number and Letter Series)
தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க: 7, 12, 19, 24, 43, ______, 91
Find the missing term of the sequence: 7, 12, 19, 24, 43, ______, 91
சரியான விடை: C. 48
+5, பின் முந்தைய உறுப்பைக் கூட்டுதல் மாறி மாறி: 7+5=12, 12+7=19, 19+5=24, 24+19=43, 43+5=48, 48+43=91.
Alternately add 5 and add the term before: 7+5=12, 12+7=19, 19+5=24, 24+19=43, 43+5=48, 48+43=91.
வினா 189 · அளவியல் (Mensuration)
நில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன (A யிலிருந்து C வரை, மீட்டரில்): 50 இல் E-க்கு 30 (இடது); 80 இல் B-க்கு 50 (வலது); 120 இல் D-க்கு 20 (இடது); C 150. நிலத்தின் பரப்பளவு என்பது
The readings in a field book are (from A to C, in metres): at 50, 30 to E (left); at 80, 50 to B (right); at 120, 20 to D (left); C at 150. The area of the field is
சரியான விடை: A. 6550 m²
வலது: ½×80×50 + ½×70×50 = 3750. இடது: ½×50×30 + ½×(30+20)×70 + ½×30×20 = 750 + 1750 + 300 = 2800. மொத்தம் 6550 மீ².
Right side: ½×80×50 + ½×70×50 = 3750. Left side: ½×50×30 + ½×(30+20)×70 + ½×30×20 = 2800. Total 6550 m².
வினா 190 · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportion)
ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை 1/3 : 1/4 : 1/5 : 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ______.
A person distributes his pens among four friends A, B, C and D in the ratio 1/3 : 1/4 : 1/5 : 1/6. Then the minimum number of pens that the person should have is ______.
சரியான விடை: C. 57
60 ஆல் பெருக்க: 20 : 15 : 12 : 10 → 57.
Multiply by 60: 20 : 15 : 12 : 10, total 57.
வினா 191 · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportion)
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், 'x' ன் மதிப்பு
If the ratios formed using the numbers 2, 5, x, 20 are in the same order of proportion, then the value of x is
சரியான விடை: C. 8
2 : 5 = x : 20 → x = 8.
2 : 5 = x : 20, so x = 8.
வினா 192 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
108 மற்றும் 234 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x − 51 என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது?
If the HCF of 108 and 234 is expressible in the form 23x − 51, then what is the value of x?
சரியான விடை: A. 3
மீ.பொ.வ(108, 234) = 18 → 23x − 51 = 18 → x = 3.
HCF(108, 234) = 18, so 23x − 51 = 18 and x = 3.
வினா 193 · இயற்கணிதம் (Algebra)
x³ + x² − x + 2 மற்றும் 2x³ − 5x² + 5x − 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
Find the HCF of the polynomials x³ + x² − x + 2 and 2x³ − 5x² + 5x − 3.
சரியான விடை: A. x² − x + 1
x³ + x² − x + 2 = (x + 2)(x² − x + 1), 2x³ − 5x² + 5x − 3 = (2x − 3)(x² − x + 1) → மீ.பொ.கா = x² − x + 1.
x³ + x² − x + 2 = (x + 2)(x² − x + 1) and 2x³ − 5x² + 5x − 3 = (2x − 3)(x² − x + 1), so the HCF is x² − x + 1.
வினா 194 · சுருக்குதல் (Simplification)
சுருக்குக: (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹
Simplify: (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹
சரியான விடை: C. 21/64
எந்த எண்ணின் அடுக்கு 0 = 1. 1/4 + 1/16 + 1/64 = 21/64.
Anything to the power 0 is 1, and 1/4 + 1/16 + 1/64 = 21/64.
வினா 195 · புள்ளியியல் (Statistics)
25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
The average mark of 25 students was found to be 78.4. Later on, it was found that a score of 96 was misread as 69. Find the correct mean of the marks.
சரியான விடை: B. 79.48
சரியான சராசரி = 78.4 + (96 − 69) ÷ 25 = 78.4 + 1.08 = 79.48.
Correct mean = 78.4 + (96 − 69) ÷ 25 = 79.48.
வினா 196 · இருக்கை அமைப்பு (Seating Arrangement)
D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் F-ன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?
D, F, G, H, I and M are sitting in a row. I and M are in the centre, and F and D are at the beginning and at the end. G is sitting on the left of D. Then who is sitting on the right of F?
சரியான விடை: A. H
வரிசை: F H (I M) G D → F-ன் வலதுபுறம் H.
The row is F H (I M) G D, so H is on F's right.
வினா 197 · குறியீடு மற்றும் மறுகுறியீடு (Coding and Decoding)
A = 26, SUN = 27 எனில் CAT = ?
If A = 26, SUN = 27, then CAT = ?
சரியான விடை: C. 57
தலைகீழ் எழுத்து எண்: A=26, S=8, U=6, N=13 (மொத்தம் 27). C=24, A=26, T=7 → 57.
Reverse alphabet positions: A=26; S=8, U=6, N=13 total 27; C=24, A=26, T=7 total 57.
வினா 198 · தருக்கக் காரணவியல் (Logical Reasoning)
a ≠ b ≠ c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?
If a ≠ b ≠ c is given, which one of the following is correct?
சரியான விடை: D. a ≠ c அல்லது a = c (a ≠ c or a = c)
a ≠ b, b ≠ c என்பதிலிருந்து a மற்றும் c பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது; எனவே a ≠ c அல்லது a = c.
a ≠ b and b ≠ c say nothing certain about a and c, so a ≠ c or a = c.
வினா 199 · எழுத்து-எண்-குறியீட்டுத் தொடர் (Alpha-Numeric Series)
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு: 2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ______.
The missing term in the given alpha-numeric series is 2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ______.
சரியான விடை: A. 34 H 240
முதல் எண்: +5, +7, +9, +11 → 34. எழுத்து: 4 பின்னோக்கி → H. கடைசி எண்: ×2, ×3, ×4, ×5 → 240.
First numbers +5, +7, +9, +11 give 34; letters go back 4 to H; last numbers ×2, ×3, ×4, ×5 give 240.
வினா 200 · நிகழ்தகவு (Probability)
இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?
Two unbiased dice are rolled once. Find the probability of getting the product of face values 4 or the difference of face values 5.
சரியான விடை: B. 5/36
பெருக்கல் 4: (1,4), (4,1), (2,2); வித்தியாசம் 5: (1,6), (6,1) → 5/36.
Product 4: (1,4), (4,1), (2,2); difference 5: (1,6), (6,1). 5 outcomes, so 5/36.
திறனறிவு மற்றும் காரணவியல் வினாக்கள் – விடைகள், விளக்கங்களுடன் · 19 வினாக்கள்
வினா 142 · அளவியல் (Mensuration)
ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
How many great circles can a hemisphere have?
சரியான விடை: A. 1
அரைக்கோளத்தின் அடிப்பகுதி வட்டமே அதன் ஒரே மீப்பெரு வட்டம்.
The circular base of a hemisphere is its only great circle.
வினா 143 · அளவியல் (Mensuration)
உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க.
Find the volume of a cylinder whose height is 4 m and whose base area is 500 m².
சரியான விடை: A. 2000 m³
கனஅளவு = அடிப்பரப்பு × உயரம் = 500 × 4 = 2000 மீ³.
Volume = base area × height = 500 × 4 = 2000 m³.
வினா 144 · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (Ratio and Proportion)
3x + 4y : 4x + 6y = 22 : 32 எனில் x : y என்பது
If 3x + 4y : 4x + 6y = 22 : 32 then x : y is
சரியான விடை: A. 1 : 2
32(3x + 4y) = 22(4x + 6y) → 96x + 128y = 88x + 132y → 8x = 4y → x : y = 1 : 2.
32(3x + 4y) = 22(4x + 6y) gives 8x = 4y, so x : y = 1 : 2.
வினா 145 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
a மற்றும் b என்னும் இரு எண்கள் m : n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?
If the two numbers a and b are in the ratio m : n, then the LCM of a and b is
சரியான விடை: C. mb
a = mk, b = nk எனில் மீ.சி.ம = mnk = m × (nk) = mb.
With a = mk and b = nk, LCM = mnk = m × nk = mb.
வினா 146 · புதிர்கள் (Puzzles)
ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?
An intelligent man carries 3 sacks with 30 mangoes each. As he crosses each toll, he has to give 1 mango for each sack. He crosses 30 tolls. How many mangoes will he have at the end?
சரியான விடை: D. 25
முதல் 10 சாவடிகள்: 3 மூட்டைக்கு 30 கொடுத்து 60 மீதம் (2 மூட்டைகளாக்குகிறார்). அடுத்த 15 சாவடிகள்: 30 கொடுத்து 30 மீதம் (1 மூட்டை). கடைசி 5 சாவடிகள்: 5 கொடுத்து 25 மீதம்.
10 tolls with 3 sacks: pays 30, 60 left (repacked into 2 sacks). 15 tolls with 2 sacks: pays 30, 30 left (1 sack). Last 5 tolls: pays 5, so 25 remain.
வினா 147 · அளவியல் (Mensuration)
24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?
Find the length of the longest pole that can be placed in a room 24 m long, 18 m broad and 16 m high.
சரியான விடை: C. 34 m
மூலைவிட்டம் = √(24² + 18² + 16²) = √1156 = 34 மீ.
Diagonal = √(24² + 18² + 16²) = √1156 = 34 m.
வினா 188 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
இரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?
The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 693. If one of the numbers is 77, find the other.
சரியான விடை: C. 99
மற்றொரு எண் = (மீ.பொ.வ × மீ.சி.ம) ÷ 77 = (11 × 693) ÷ 77 = 99.
Other number = HCF × LCM ÷ 77 = 11 × 693 ÷ 77 = 99.
வினா 189 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
A merchant has 120 litres and 180 litres of two kinds of oil. He wants to sell oil by filling the two kinds of oil in tins of equal volumes. What is the greatest capacity of such a tin?
சரியான விடை: C. 60 லி (60 litres)
120, 180 இன் மீ.பொ.வ = 60 லி.
HCF of 120 and 180 = 60 litres.
வினா 190 · எண்ணியல் (Number System)
1³ + 2³ + 3³ + … + K³ = 72900 எனில், 1 + 2 + 3 + … + K யின் மதிப்பு காண்க.
If 1³ + 2³ + 3³ + … + K³ = 72900, then find 1 + 2 + 3 + … + K.
சரியான விடை: C. 270
கனங்களின் கூடுதல் = (1 + 2 + … + K)². எனவே 1 + 2 + … + K = √72900 = 270.
Sum of cubes = (1 + 2 + … + K)², so 1 + 2 + … + K = √72900 = 270.
வினா 191 · எண் மற்றும் எழுத்துத் தொடர் (Number and Letter Series)
2, 3, 5, 9, x, 33, y, ….. என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?
In the series 2, 3, 5, 9, x, 33, y, ….. what is the value of x + y?
சரியான விடை: D. 82
வேறுபாடுகள் 1, 2, 4, 8, 16, 32 → x = 17, y = 65 → x + y = 82.
Differences 1, 2, 4, 8, 16, 32 give x = 17 and y = 65, so x + y = 82.
வினா 192 · எழுத்து-எண்-குறியீட்டுத் தொடர் (Alpha-Numeric Series)
AZBYCX ….. YBZA என்றவாறு எழுதும் போது ஆங்கில உயிரெழுத்திற்கு இடது புறம் அருகில் வரக்கூடிய உயிரெழுத்து அல்லாத எழுத்துக்கள் எத்தனை?
When we write AZBYCX ….. YBZA, how many consonants will appear to the left of the vowels?
சரியான விடை: C. 9
AZBYCXDWEVFUGTHSIRJQKPLOMN NMOLPKQJRISHTGUFVEWDXCYBZA என எழுதினால் E, U, I, O, O, I, U, E, A ஆகியவற்றின் இடதுபுறம் மெய்யெழுத்து வருகிறது → 9.
Writing AZBYCXDWEVFUGTHSIRJQKPLOMN NMOLPKQJRISHTGUFVEWDXCYBZA, a consonant stands just left of E, U, I, O, O, I, U, E, A: 9.
வினா 193 · இரத்த உறவுகள் (Blood Relations)
ரமீலா கூறுகையில், “எனது மாமனாரான ராமநாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை”, ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமநாதனுக்கு என்ன உறவு?
If Rameela says, “Ragavi's father Raman is the only son of my father-in-law Ramanathan”, then how is Ramani, who is the sister of Ragavi, related to Ramanathan?
சரியான விடை: D. பேத்தி (Grand Daughter)
ரமணி, ராமனின் மகள்; ராமன், ராமநாதனின் மகன் → ரமணி ராமநாதனின் பேத்தி.
Ramani is Raman's daughter and Raman is Ramanathan's son, so Ramani is his granddaughter.
வினா 194 · காலம் மற்றும் வேலை (Time and Work)
3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாட்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாட்களில் ரூ.15,040 சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாட்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?
3 men and 4 women can earn Rs. 3,780 in 7 days. 11 men and 13 women earn Rs. 15,040 in 8 days. In what time will 7 men and 9 women earn Rs. 12,400?
சரியான விடை: C. 10 நாட்கள் (10 days)
ஒரு நாள்: 3m + 4w = 540, 11m + 13w = 1880 → m = 100, w = 60. 7m + 9w = 1240/நாள் → 12400 ÷ 1240 = 10 நாட்கள்.
Per day 3m + 4w = 540 and 11m + 13w = 1880, so m = 100 and w = 60. 7m + 9w = 1240 a day, and 12400 ÷ 1240 = 10 days.
வினா 195 · கூட்டுவட்டி (Compound Interest)
அசல் தொகை ரூ. 10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.
For the principal Rs. 10,000 the rate of interest is 15% p.a. for 3 years. Find the difference between C.I. and S.I.
சரியான விடை: C. 708.75
கூ.வ = 10000(1.15³ − 1) = 5208.75; த.வ = 10000 × 15 × 3 ÷ 100 = 4500; வித்தியாசம் = 708.75.
CI = 10000(1.15³ − 1) = 5208.75 and SI = 4500, so the difference is 708.75.
வினா 196 · தனிவட்டி (Simple Interest)
ஒருவர் ரூ. 2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ. 1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
A person takes a loan of Rs. 2,000 at 6% simple interest. He returns Rs. 1,000 at the end of one year. In order to clear his dues at the end of 2 years, how much would he pay?
சரியான விடை: B. ரூ. 1,180 (Rs. 1,180)
முதல் ஆண்டு வட்டி 2000 இல் 6% = 120; இரண்டாம் ஆண்டு மீதமுள்ள அசல் 1000 இல் 6% = 60. செலுத்த வேண்டியது = 1000 + 120 + 60 = 1180.
Interest for year 1 on 2000 = 120; for year 2 on the remaining principal 1000 = 60. Due = 1000 + 120 + 60 = 1180.
வினா 197 · தனிவட்டி (Simple Interest)
விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ. 10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?
Vignesh borrows Rs. 10,000 for 2 years at 4% p.a. simple interest. He lends it to Sanjay at 6% p.a. for 2 years. Find his gain in this transaction per year.
சரியான விடை: A. 200
ஆண்டு லாபம் = 10000 × (6 − 4)% = 200.
Gain per year = 10000 × (6 − 4)% = 200.
வினா 198 · மீ.சி.ம & மீ.பெ.வ (LCM and HCF)
7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.
Find the ratio between HCF and LCM of the numbers 7 and 13.
சரியான விடை: A. 1 : 91
பகா எண்கள்: மீ.பொ.வ = 1, மீ.சி.ம = 91 → 1 : 91.
7 and 13 are prime: HCF = 1, LCM = 91, so 1 : 91.
வினா 199 · சதவீதம் (Percentage)
கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.
Kayal bought 5 dozen eggs. Out of that 45 eggs are good eggs. Express the number of rotten eggs in percentage.
சரியான விடை: C. 25%
மொத்தம் 60, கெட்டவை 15 → 15/60 × 100 = 25%.
60 eggs, 15 rotten: 15/60 × 100 = 25%.
வினா 200 · குறியீடு மற்றும் மறுகுறியீடு (Coding and Decoding)
Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday வின் மதிப்பு என்ன?
If Sunday = 2, Tuesday = 3, Thursday = 2, what is the value of Monday?
சரியான விடை: B. 2
சொல்லில் உள்ள உயிரெழுத்துகளின் எண்ணிக்கை: Monday (o, a) = 2.
The value is the number of vowels: Monday has o and a, so 2.
மேலும் ஆண்டுகளின் வினாக்கள் விரைவில் சேர்க்கப்படும். வெற்றிப்பாதை மாணவர்கள் இவற்றை முழு மாதிரித் தேர்வாக எழுதி, தலைப்புவாரியான பகுப்பாய்வும் வழிகாட்டி அமர்வும் பெறுகிறார்கள்.
வெற்றிப்பாதை அகாடமி ஒரு தனியார் பயிற்சி நிறுவனம்; TNPSC அல்லது தமிழ்நாடு அரசுடன் தொடர்பில்லை. இங்குள்ள தகவல்கள் 16.10.2026 அன்று சரிபார்க்கப்பட்டன. அதிகாரப்பூர்வ தகவலுக்கு tnpsc.gov.in பார்க்கவும்.